கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு,வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்” என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை. ஸ்ரீ வில்லிபுத்தூர், காட்டுமன்னார் கோவில்,மன்னார்கோவில்,மேலப்பாவூர், ராஜமன்னார் குடி ஆகிய இடங்களில் இப்பேரழகைக் காணலாம். இவை அனைத்தினுள்ளும் புகழ் பெற்றது மன்னார்குடி மட்டுமே. மன்னார்குடி ‘தக்ஷிணத்வாரகை’ என்னும் பெயர் பெற்றது; அழகான மதிற்சுவர் அமையப் பெற்றது.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் "ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்' என்றும், முன்காலத்தில் செண்பக மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தமையால் "செண்பகாரண்ய க்ஷத்திரம்' எனவும், துவாரகையில் கண்ணன் செய்த லீலைகளை இங்கு நிகழ்த்தியமையால் "தட்சிண துவாரகை' என்றும், மன்னன் குலோத்துங்கன் இக்கோயிலை அமைத்ததால் "குலோத்துங்க சோழ விண்ணகரம்' என்றும், ராஜ மன்னராகிய அருள்மிகு ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் "ராஜமன்னார்குடி' என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் "மன்னார் கோயில்' என்றும் இவ்வூர் அழைக்கப் பெறுகிறது.
"மன்னார்குடி மதிலழகு, மண்ணில் மிக்கது மன்னார்குடி, மறையோர் மிகுந்தது மன்னார்குடி, கோயில் பாதி... குளம் பாதி' எனும் பழமொழிகளாலும் இவ்வூர் பெருமை பெறுகிறது.
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1072-கி.பி.1122) ராஜகோபால சுவாமியின் கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கட்டுவித்தான். பிற்காலத்தில் ரகுநாத நாயக்கர் (கி.பி.1600-1634), விஜயராகவ நாயக்கர் (கி.பி.1634-1672) ஆகியோர் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளதைக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.
மாமதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் தாம் அருளிய ""தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடதும்...'' எனத் தொடங்கும் 10 பாசுரங்களை ஸ்ரீ மணவாளமாமுனிகள் அபிமானமாகச் சமர்ப்பித்து இக்கோயிலை அபிமான திவ்யதேசமாகத் திகழச் செய்தார்.
தென்னகத்து விண்ணகரமாம் மன்னார்குடி மாநகரத்தில் ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயில் 7 பிரகாரங்கள், 16 கோபுரங்கள், 24 சந்நிதிகள், நீண்ட நெடிதுயர்ந்த மதில்கள், அழகான மண்டபங்கள், 154 அடி உயர வானளாவ உயர்ந்து நிற்கும் கம்பீரமான ராஜகோபுரம், அதன் எதிரே 54 அடி உயர ஒற்றைக் கல்லாலான கருட ஸ்தம்பம் உள்பட கவின் மிகு சிற்பங்கள் நிறைந்த கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது. கோபுரத்திற்கு வடபுறம் ஸ்ரீவானமாமலை ஜீயர் மடமும், தென்புறம் ஸ்ரீஅஹோபில ஜீயர் மடமும் உள்ளன. இத்தலத்தில் ஹரித்ரா நதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் உள்ளிட்ட ஒன்பது திருக்குளங்களுடன், காவிரியின் கிளை நதியான பாமணி ஆறு, பத்தாவது புண்ணிய நீர்நிலையாகத் திகழ்கிறது.
கோபியருடன் நம் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளியபோது, கோபியர் உடலில் பூசியிருந்த ஹரித்ரா (மஞ்சள்) இக்குளத்தில் கலந்ததால் "ஹரித்ரா நதி' எனப் பெயர் பெற்றது. இது 1158 அடி நீளம், 847 அடி அகலமுடைய பிரம்மாண்டமான மிகப் பெரிய குளமாகும். காவிரியின் மகள் எனவும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றிணைந்தது எனவும் ஹரித்ரா நதியை கூறுவர். "மற்ற புண்ணியத் தலங்களில் ஒரு கோடி ஆண்டுகள் தவமியற்றி பெற்ற பெரும்பயனை ஹரித்ரா நதிக் கரையில் ஓராண்டில் அடையலாம்' என நாரதர் கூறியதாகத் தல வரலாறு கூறும்.
இக்கோயிலில் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத பரவாசுதேவப் பெருமாள், நின்ற கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கிறார். திருப்பதி கோயில் போன்று, கீழே தரைப் பகுதியிலிருந்து (பீடமின்றி) நின்ற ஆஜானுபாகுவான 7 அடி உயரமுடைய கம்பீர எழிலுக்கு அழகு சேர்ப்பதுபோல் அண்மையில் 1 கோடி ரூபாய் செலவில் பெருமாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
செண்பகலட்சுமி என்ற பெயரில் மூலவராக அழகு தரிசனம் தரும் தாயார், உற்சவராக செங்கமலத் தாயாராக கோயில் கொண்டுள்ளார். ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி என்கிற திருநாமங்களுடன் தாமரை மலரின் மீது அமர்ந்த திருக்கோலம்! இரு பக்கம் யானைகளுடன் கஜலட்சுமியாகவும், ராஜநாயகி மற்றும் துவாரகா நாயகி என்ற தோழியருடன் வீரலட்சுமியாகவும் அருளாட்சி புரிகின்றாள்.
நம் பண்பாட்டு மரபிற்கேற்ப, இக்கோயிலில் உள்ள தாயார் "படி தாண்டாப் பத்தினி' ஆவார். ஆம்... செங்கமலத் தாயாரின் உற்சவங்கள் அனைத்தும் (ஆடிப்பூரம் தேர் உட்பட) கோயில் வளாகத்தின் உள்ளேயே நடைபெறும்.
உற்சவ மூர்த்தியான ஸ்ரீவித்யா ராஜகோபாலனை வர்ணிப்பது கடினம்.
இவன் கோஸகன்; ஆமருவியப்பன். ஒரே பட்டாடையை இடுப்பில் சுற்றிகொண்டு அதையே பின்புறமாகக் கொண்டு சென்று ஒயிலான தலைப்பாகையாகவும் ஆக்கிக்கொண்டுள்ளான். ‘த்ரைமம் வேத்ரம்; ஏக வஸ்த்ரம்’ என்று தொடங்கும் இவனைப் போற்றும் சுலோகம். மூன்று வளைவு கொண்ட சாட்டையும்,ஒற்றை ஆடையும் தனிச்சிறப்பு.இந்த ஆயர் சிறுவனின் மேனியழகில் மனத்தைப் பறிகொடுத்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் அந்திம காலத்தில் இங்கேயே வாஸம் செய்தாராம்.
ராஜகோபாலனுக்கு இடது பக்கத்தில் ஸ்ரீ சந்தான கோபாலன்! ஆதி சேஷன் மீது அனந்த சயனம் கொண்டு, கால் விரலை வாயில் வைத்துக் கொண்டு குழந்தைக் கண்ணனாகக் காட்சியருளுகிறார். மழலைச் செல்வமாக காட்சியளிக்கும் இந்த சந்தான கோபாலனை அர்ச்சகர்கள், பக்தர்களின் கையில் கொடுத்து அவர்களுடைய பல பிறவிகளில் செய்த பாவங்களைத் தீர்த்து வைக்கின்றனர். மழலைச் செல்வமில்லாத மங்கையரின் மடியில் தவழ்ந்து குழந்தை வரம் அருளுகின்றான் இந்த குட்டிக் கண்ணன்.
புன்னை மரம் தலவிருட்சமாகும். நாள்தோறும் இக்கோயிலில் ஏழுகால ஆராதனை வழிபாடுகள் குறைவில்லாமல் நடைபெற்று வருகின்றன. சமீபகாலமாக அதிகாலையில் விஸ்வரூப தரிசன வழிபாடும் செவ்வனே செயல்பட்டு வருகிறது
Now little bit of History from Srimathi Krishnakumar who traces the history of the ancient Rajagopalaswamy temple in Mannargudi, Tamil Nadu, Published on The Hindu.
A rock inscription dated 1577 records grants to the temple from Atchutappa Nayaka of Thanjavur, but his greatest contribution is the unique Garuda dhwaja sthambham. It consists of a small Garuda temple resting on a 5' x 5' granite pedestal on a 54' monolithic pillar, the stone for which was brought all the way from Pudukkottai, as granite was not locally available. Figures of Rajagopalan, Hanuman, Atchutappa Nayaka and his wife Murtimamba have been carved on the pedestal. Palm leaf manuscripts say that Atchutappa Nayaka's successors Raghunatha Nayaka (A.D. 1614-1633), Vijaya Raghava Nayaka who called himself "Mannaru Dasa" (A.D. 1633-1673) and his son Mannaru Devan built many prakaras, gopurams, mandapams and tanks that brought the temple to its immense proportions.
Vijaya Raghava Nayaka built the huge outer gopurams, the aayiramkaal mandapam or the 1000-pillared hall and the Krishnathirtham tank, all of which still exist. He also installed copper statuettes of Atchutappa Nayaka's guru Tirumalai Nambi Thathachariar, Tirumangai Azhwar and Periazhwar.
Vijaya Raghava Nayaka was a versatile and highly talented patron of the arts. Dance, drama and literature flourished in his time. He composed a number of works in Telugu and dedicated them to the deity of Mannargudi. Most of the dramas written by him premiered in the Aayiramkaal mandapam.
One of the leading litterateurs in his court was the Telugu poet Changalva Kalakavi. In 1951, the Tanjore Saraswati Mahal Library printed his "Rajagopala Vilasamu", composed by him in A.D. 1633. The prabhandha relates how Champakaranya or the Champaka forest southeast of Kumbakonam became Mannargudi.
In ancient times, Champakaranya was a serene, sacred spot inhabited by many rishis of whom Vahnimukha was one. He had two sons, Gopralaya and Gobhila, both ardent devotees of lord Vishnu. Pleased with the severity of Gopralaya's penance, the lord granted him a boon. Apart from a request for moksha for himself and his brother, Gopralaya beseeched the Lord to stay forever in Champakaranya. Vishnu consented and was installed as Lord Gopala. The tirtha is known as the Krishna Tirtha and the water flowing from it is the Haridra Nadi. The tank at Mannargudi is still called Gopralaya, after the sage responsible for bringing the Lord of Dwaraka to Champakaranya.
The Rajagopala Swamy Temple with its five prakaras, seven mandapams, and seven gopurams including the majestic 154' tall Rajagopuram stands on six sq. acres of land. Tradition, in fact, takes back the antiquity of the temple, not by centuries, but by aeons. Brahma, the creator, is said to have worshipped at this temple in the Krita Yuga, Goddess Lakshmi and Brigu Maharshi in the Treta Yuga, Agni in the Dwapara Yuga and at the end of the Dwapara Yuga, Gobhila and Gopralaya whose austerities made Rajagopala a permanent resident of Mannargudi. In the present age or Kali Yuga, history records the devotion of Kulothunga Chola, the Nayaka kings, Kshetrayya, Tyagaraja, Muthuswamy Dikshitar and several others, not to speak of millions of humble devotees who throng the temple daily.
No comments:
Post a Comment