தந்தைக்கும் மகனுக்குமான உறவு தமிழ்ச் சமூகத்தில் எப்போதும் ஒரு பெரும் பிரச்சினையாகவே திகழ்கிறது.
” நீ எங்கே பறந்தாலும் நூல் என் கையில் இருக்கட்டுமே “ என்று தகப்பன் நினைக்கிறான்.
” என்னை விட்டுவிட்டால் இன்னும் கொஞ்சம் உயரப் பறப்பேனே ” என்று மகன் தவிக்கிறான்
விதைத்தவன் நான்தானே என்ற தினவு தந்தைக்கும் விளைந்தவன் நான்தானே என்ற திமிர் மகனுக்கும் எல்லாத் தலைமுறைகளிலும் இருந்தே வருகிறது.
குடும்பம் – அரசியல் – தொழில் என்று எல்லா நிலைகளிலும் இதுவே நீள்கிறது.
இதனால் என் தந்தையும் நானும் சந்தித்த பிரச்சினைகள் அதிகம். பல ஆண்டுகள் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமலே இருந்திருக்கிறோம். அவருக்கு நன்மைகளைத் தவிர வேறெதுவும் நான் செய்ததில்லை ; ஆனால் அவரோ வைராக்கியத்தில் என்னை வதைத்திருக்கிறார். இப்போது மரணம் என் கன்னத்தில் அறைந்து சொல்கிறது :
” வைரமுத்து ! உன் தந்தை இன்னும் கொஞ்சம் ஈரமுள்ளவராய் இருந்திருக்கலாம். நீ இன்னும் கொஞ்சம் இரக்கமுள்ளவனாய் இருந்திருக்கலாம்.”
நாங்கள் திருந்துவதற்குரிய வாய்ப்பைக் காலம் பறித்துவிட்டது.
இருக்கும் தலைமுறையாவது…
I was able to find good advice from your blog articles.
ReplyDeletemy weblog - adiphene where to buy